×

சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் பாக்.கிற்கு செல்கிறது இந்திய குழு

மும்பை:  இந்தியா வழியாக பாய்ந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகளின் தண்ணீரை பங்கீடு செய்வதற்காக கடந்த 1960ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத்தின்படி சிந்து நதி நீர் ஆணையம் ஆண்டுக்கு ஒரு முறை கூட்டம் கூடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாகிஸ்தானின் சிந்து நதி நீர் ஆணையத்தின் தலைவர் தலைமையில் ஒரு குழு இந்தியா வந்து பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான சிந்து நதி நீர் ஆணையத்தின் கூட்டம் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை இஸ்லாமாபாத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க இந்தியாவின் சிந்து நதி நீர் ஆணைய தலைவர் பிரதீப் குமார் சக்சேனா தலைமையில் 10 பேர் குழு பாகிஸ்தான் செல்கிறது. பாகிஸ்தான் தரப்பில் அந்த நாட்டின் சிந்து நதி நீர் ஆணைய தலைவர் சையது முகமது மெகர் அலி ஷா தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது.

இந்திய குழு வரும் 28ம்  தேதி அட்டாரி-வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் செல்கின்றது. பின்னர் மார்ச் 4ம் தேதி அதே வழியாக  அக்குழுவினர் இந்தியாவுக்கு திரும்பி வரும். இந்த பேச்சுவார்த்தையில் இடம் பெறும் முக்கிய விஷயங்கள் குறித்து இருதரப்பின் சார்பிலும் இறுதி செய்யப்பட்டு விட்டன என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Pakistan Indian , Indus River, Water Sharing Agreement, Indian Group
× RELATED பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய...