×

அறநிலையதுறையின் கீழ் சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: சிதம்பரம் நடராசர் ஆலயத்துக்கு கடந்த 13ம் தேதி சென்ற  பட்டியலின பெண் பக்தர் ஜெயஷீலா என்பவரை,  தீட்சிதர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தடுத்து,  அவரது சாதியை குறிப்பிட்டு இழிவுபடுத்தி, அவமதிக்கப்பட்டுள்ளார்.  மேலும் கோயிலுக்கு உள்ளே நிற்க விடாமல் தள்ளி வெளியேற்றியுள்ளனர். இது தொடர்பாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை காவல்துறை இதுவரை கைது செய்யாமல் இருப்பது சரியல்ல. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக சட்டம் நிறைவேற்றி, அதன்படி அர்ச்சகர்கள் நியமனம் செய்து, சமூகநீதி வழங்கியுள்ள தமிழ்நாடு அரசு, சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகத்தையும், அதன் உடமைகளையும் கையகப்படுத்த தனி சிறப்புச் சட்டம் நிறைவேற்றி, அதன் முழு நிர்வாகத்தையும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Chidambaram ,Temple ,Department of State ,Mutharasan , Charitable Trusts, Chidambaram Temple Administration, Mutharasan Insistence
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...