திருவொற்றியூர் மண்டலத்தில் இயந்திரம் திடீர் பழுது வாக்குப்பதிவு பாதிப்பு

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 5வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி நகர் தேவி கருமாரியம்மன் பள்ளியில் 75வது வாக்குச்சாவடியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்தில் 35 பேர் வரை வாக்களித்த நிலையில், அங்குள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. அதிகாரிகள் முயற்சி செய்தும் அதை சரி செய்ய முடியவில்லை.

இதையடுத்து, தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் இயந்திரத்தை சரி செய்ய முடியாததால், அந்த வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக புதிய வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு, வாக்குப்பதிவு தொடங்கியது. இதன்காரணமாக, ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால், அந்த வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். இதேபோல், திருவொற்றியூர் விக்டோரியா பள்ளியில் 165வது பூத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் காலை 7 மணிக்கு முதல் வாக்கு செலுத்தியவுடன் பழுதானது. தொழில்நுட்ப  நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அது சரி செய்யப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது.

Related Stories: