×

காஷ்மீருக்குள் நுழையும் ஆப்கான் தீவிரவாதிகள் : அமெரிக்க ஆயுதங்கள் பறிமுதல்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டு ஆகஸ்ட்டில் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து, அங்கு தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். மேலும், அமெரிக்க படைகள் விட்டுச் சென்ற ஏராளமான நவீன ஆயுதங்களும் அவர்களின் வசம் சென்றுள்ளன. இவை தீவிரவாதிகளின் கைகளுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும், அவை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தக் கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டது.

இதை நிரூபிப்பது போல், காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட தீவிரவாதியிடம் இருந்து அமெரிக்க ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இது குறித்து ராணுவ மேஜர் ஜெனரல் அஜய் சந்த்புரா நேற்று அளித்த பேட்டியில், ‘‘எல்லை கட்டுப்பாட்டு எல்லையில் சமீபத்தில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆப்கானில் அமெரிக்க ராணுவம் விட்டு சென்ற நவீன ஆயுதங்களும், தகவல் தொடர்பு கருவிகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன. இதன்மூலம், ஆப்கான் தீவிரவாதிகள் காஷ்மீரில் நுழைவது உறுதியாகி இருக்கிறது,’’ என்றார்.



Tags : Kashmir ,US , Entering Kashmir Afghan militants : US Seizure of weapons
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!