செயல்படாத சிறுவர் அரங்கம்: கண்டும், காணாமல் அதிகாரிகள்

வருசநாடு: கடமலைக்குண்டுவில் செயல்படாமல் உள்ள காவலர் சிறுவர் விளையாட்டு அரங்கத்ைத பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது. தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவலர்களின் குழந்தைகள் விளையாடுவதற்காக காவல்துறை சார்பில் கடமலைக்குண்டு ஊராட்சி அலுவலக வளாகத்தில் கடந்த 2015ல் சிறுவர் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு, அதை கண்காணிக்க 2 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மாத ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை இந்த அரங்கம் செயல்படாமல் பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். காவலர்களின் குழந்தைகள் நலன் கருதி, இந்த சிறுவர் அரங்கத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: