×

புரோ கபடி லீக்; தோல்வியுடன் வெளியேறிய தமிழ்தலைவாஸ்: லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவு

பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்றுடன் லீக் போட்டிகள் முடிகிறது. நேற்று நடந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் 43-36 என புனேரி பால்டனை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் தபாங் டெல்லி 40-32 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை சாய்த்தது. 12வது வெற்றியை பதிவு செய்த டெல்லி, பட்டியலில் 2வது இடம்பிடித்து நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் தமிழ்தலைவாஸ் தனது கடைசி லீக் போட்டியில் 33-43 என குஜராத் ஜெயன்ட்ஸ் அணியிடம் சரண் அடைந்தது.

22 போட்டியில் 5 வெற்றி, 11 தோல்வி, 6 டிரா என 47 புள்ளிகளுடன் 11வது இடத்துடன் திருப்தி அடைந்து தமிழ்தலைவாஸ் வெளியேறியது. இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்-புனேரி பால்டன், குஜராத்-யுமும்பா, பாட்னா-அரியானா அணிகள் மோதுகின்றன. இதன்முடிவை பொறுத்து எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெறும் 3 அணிகள் தேர்வாகும். யு.பி. யோத்தா ஏற்கனவே எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Pro Kabaddi League ,Tamil Talaivas , Pro Kabaddi League; Tamil Talaivas left with defeat: League round matches end today
× RELATED புரோ கபடி லீக் தொடர் பைனலில் புனேரி பல்தான்