×

நாட்டின் பல தலைவர்கள் தன்னை பயங்கரவாதி எனக் கூறி வருவது சிரிப்பை வரவழைக்கிறது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி: நாட்டின் பல தலைவர்கள் தன்னை பயங்கரவாதி எனக் கூறி வருவது சிரிப்பை வரவழைப்பதாகவும், பயங்கரவாதி என்று சொல்லும் நபர் இன்று 12,430 வகுப்பறைகளை நாட்டுக்கு அர்ப்பணிப்பதாகவும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் 240 அரசுப் பள்ளிகளில் சுமார் 12,430 புதிய ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஒவ்வொரு மாணவரும் சிறந்த கல்வியைப் பெற வேண்டும் என்பது அம்பேத்கரின் கனவாக இருந்தது எனவும் துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், மற்ற மாநிலங்களில் அவரது கனவு நனவாகவில்லை எனவும் அவர் கூறினார்.

அவரது கனவுகள் குறைந்தபட்சம் டெல்லியில் நனவாகத் துவங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். டெல்லி அரசு கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 20,000 வகுப்பறைகளை கட்டியுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து கூட 20,000 வகுப்பறைகளை அமைக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பெரிய தலைவர்கள், கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி என்று கூறி வருவது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. பயங்கரவாதி என்று சொல்லும் நபர், இன்று 12,430 வகுப்பறைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

தலைவர்கள் பள்ளிகளைத் தவிர எதற்கும் பயப்படுவதில்லை என கூறிய அவர் நல்ல பள்ளிகள் கட்டினால் ஜாதி, மதத்தின் பெயரால் தலைவர்களுக்கு ஓட்டு கிடைக்காது என தெரிவித்தார். மேலும் இந்த பள்ளிகள் உறுதியான தேசபக்தர்களை உருவாக்கும் எனவும் நாங்கள் பள்ளிகளை கட்டவில்லை, தேசபக்தர்களை உருவாக்க தொழிற்சாலைகளை அமைக்கிறோம் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal , It is laughable that so many leaders of the country are calling themselves terrorists: Delhi Chief Minister Arvind Kejriwal
× RELATED சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக...