×

தமிழ்த்தாத்தா உ.வே.உ.வே.சாமிநாத அய்யர் பிறந்தநாள்: பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் பிறந்தநாளில் அவர்தம் தொண்டைப் போற்றுகிறேன் என முதல்வர் கூறியுள்ளார். பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச்சுவடிகளை அலைந்து திரிந்து அச்சிலேற்றித் தமிழ்ப்பதிப்பு வரலாற்றில் நிலைபெற்றிட்ட தமிழ்த்தாத்தா உ.வே.சா தொண்டைப் போற்றுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தொன்மையின் அடையாளங்களான சங்க இலக்கியங்கள், சமணம், பவுத்தக் காப்பியங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பழந்தமிழ் நூல்களின் ஏட்டுச்சுவடிகளை அலைந்து திரிந்து அச்சிலேற்றித் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் நிலைபெற்றிட்ட தமிழ்த்தாத்தாவின் பிறந்தநாளில் அவர்தம் தொண்டைப் போற்றுகிறேன் என முதல்வர் கூறியுள்ளார்.

மேலும் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் தமிழில் வெளியிட்ட அறிக்கையில் தமிழ் தாத்தா உ. வே. சாமிநாதய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன் என பிரதமர் கூறியுள்ளார்.

மேலும் தமிழ் கலாசாரம் மற்றும் மொழிக்காக அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தை கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவர். இளைய சமுதாயத்தினர் அவரது ஒப்பிலா படைப்புகளை வாசிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தனது டிவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Saminatha Iyer ,Modi ,Chief Minister ,MK Stalin , Tamil Nadu Grandfather Saminatha Iyer's Birthday: Prime Minister Modi, Chief Minister MK Stalin and other leaders congratulate
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...