×

சென்ட்ரல் பேங்க், ஐ.ஓ.பி. வங்கிகள் தனியார் மயமா?: 2 வங்கி பங்குகளை ரூ.44,000 கோடிக்கு விற்க திட்டம்..ஒன்றிய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை என தகவல்..!!

டெல்லி: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியர் ஓவர்சிஸ் பேங்க் ஆகிய வங்கிகளை தனியாருக்கு விற்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது தொடர்பான அறிவிப்பை பட்ஜெட்டின் போது ஒன்றிய அரசு அறிவித்தது. அப்போது பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்ட போவதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கப்படுத்துவது தொடர்பான அறிவிக்கையை  நிதி ஆயோக் அமைப்பு ஒன்றிய அரசிடம் அளித்துள்ளது. 
அதன் அறிக்கையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியர் ஓவர்சிஸ் வங்கி ஆகிய இரு வங்கிகளும் முதன்மை பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரு வங்கிகள் மதிப்பு சுமார் ரூ.44,000 கோடி ஆகும். இதில்  இந்தியர் ஓவர்சிஸ் வங்கியின் சந்தை முதலீடு மட்டும் 31,641 கோடி என கூறப்படுகிறது. இந்த இரு வங்கிகள் மட்டுமின்றி மஹாராஷ்டிரா வங்கியும் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா 2ம் அலை காரணமாக இதற்கான நடவடிக்கைகள் தாமதமானாலும் வங்கிகளை தனியாரிடம் வழங்குவதில் ஒன்றிய அரசு உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

The post சென்ட்ரல் பேங்க், ஐ.ஓ.பி. வங்கிகள் தனியார் மயமா?: 2 வங்கி பங்குகளை ரூ.44,000 கோடிக்கு விற்க திட்டம்..ஒன்றிய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை என தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Central Bank ,IA O.O. GP ,Union Government ,FINANI AYOC ,Delhi ,Central Bank of India ,Indian Oversis Bank ,Fishi Aayog ,Dinakaran ,
× RELATED வங்கதேசம் – மேற்குவங்கத்தின் சாகர்...