அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவராக எஸ்.பிரபாகரன் மீண்டும் தேர்வு

சென்னை: அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவராக தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் பதவி வகித்து வந்தார். அகில இந்திய பார்கவுன்சில் தலைவராக மனன் குமார் மிஸ்ரா பதவி வகித்து வருகிறார்.இந்த பதவிகளுக்கான காலம் முடிவடைந்த நிலையில் மீண்டும் தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 6ம் தேதி அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பாணைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அகில இந்திய பார்கவுன்சிலின் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அப்போது, அறிவிப்பாணையை எதிர்த்தவர்கள் தங்கள் எதிர்ப்பை வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து, அகில இந்திய பார்கவுன்சில் தலைவராக மனன் குமார் மிஸ்ரா, துணை தலைவராக மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். துணை தலைவராக 2வது முறை தேர்வாகியுள்ள மூத்த வழக்கறிஞர் பிரபாகரனுக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத்தலைவர் கார்த்திகேயன், பார்கவுன்சில் செயற்குழு தலைவர் பிரிசில்லா பாண்டியன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: