×

துணை ராணுவப்படை பாதுகாப்புக்கு உத்தரவிட அதிமுக விடுத்த கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட்: சட்டம் , ஒழுங்கு பேணி காக்கப்படும் என டிஜிபி தரப்பு உறுதி

சென்னை: துணை ராணுவப்படை பாதுகாப்புக்கு உத்தரவிட அதிமுக விடுத்த கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. கோவையில் அனைத்து சாவடிகளிலும் தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என ஆணையம் உறுதிமொழி அளித்துள்ளது. ஆணையத்தின் உறுதிமொழிரய ஏற்று அதிமுக மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தவ் தொடர்பாக புதிய உத்தரவை பிறப்பிக்க தேவையில்லை எனவும் ஐகோர்ட் கூறியுள்ளது.

தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மாநில  தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் துணை ராணுவம் தேவையில்லை என தமிழ்நாடு டிஜிபி தரப்பு கூறியது. நகர்ப்புற தேர்தலில் தேவைப்பட்டால் மத்திய துணை ராணுவ படை வரவழைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. சட்டம் , ஒழுங்கு பேணி காக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பு உறுதி அளித்துள்ளது.

Tags : Deputy Military Force ,eCourt ,DGB , Paramilitary,, AIADMK, demand, rejection
× RELATED தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி...