×

ஐ.என்.எஸ். விசாகப்பட்டினத்தில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை வெற்றிகர சோதனை!: இந்திய கடற்படையின் வலிமை மீண்டும் உறுதி..!!

டெல்லி: இந்திய கடற்படையின் போர் கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினத்தில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ரஷ்யா மற்றும் இந்தியாவின் கூட்டு திட்டத்தில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை, அதிவேகத்தில் மிக துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது. மேலும் எதிரிகளின் ரேடாரில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை சுமார் 400 கிமீ பயணம் செய்து தாக்கும் தன்மை கொண்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பிஜே -10 திட்டத்தின் கீழ் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஏவுகணையை நீர்மூழ்கி கப்பல், கப்பல் அல்லது விமானத்தில் இருந்தும் ஏவலாம். இந்நிலையில் இந்திய கடற்படையின் போர் கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினத்தில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இந்த பரிசோதனை பிரம்மோஸ் ஏவுகனை மேம்பாட்டில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. ஏவுகணையின் வெற்றிகரமான சோதனை இந்திய கடற்படையின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தியது. முழுக்க முழுக்க உள்நாட்டு மூலப்பொருளைக் கொண்டு பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : INS ,Visakhapatnam ,Indian Navy , BrahMos supersonic cruise missile, hit, test
× RELATED கடற்கொள்ளை தடுப்பு ஐஎன்எஸ் சாரதா கப்பலுக்கு விருது