×

முல்லை பெரியாறு அணை விவகாரம்: தமிழ்நாட்டின் உரிமைகளை எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு விட்டுக்கொடுக்காது; துரைமுருகன்

சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு விட்டுக்கொடுக்காது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். முல்லை பெரியாறு அணை குறித்த கேரள ஆளுநரின் பேச்சு உச்சநீதிமன்ற  தீர்ப்புக்கு முரணானது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என அமைச்சர் கூறியுள்ளார்.


Tags : Mullah ,Periyari ,Tamil Nadu Government ,Tamil Nadu ,Thurimurugan , Mulla Periyaru Dam, Ownership of Tamil Nadu, Government of Tamil Nadu, Thuraimurugan
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...