அரசு நிர்வாகம் செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்த முதல்வர் மம்தாவுக்கு ஆளுநர் ஜெகதீப் அழைப்பு!!

கொல்கத்தா : அரசு நிர்வாகம் செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜிக்கு ஆளுநர் ஜெகதீப் தாங்கர் அழைப்பு விடுத்துள்ளார். ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ள ஜெகதீப் தாங்கர், அரசியல் அமைப்பு சட்டப்படி பதிவியேற்பு உறுதி மொழியை கடைபிடிப்பது இருவரது கடமை என்று கூறியுள்ளார். ஆளுநர் மாளிகைக்கு மம்தா எந்த நேரத்திலும் வரலாம் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக மம்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியுள்ள ஆளுநர், அரசியல் அமைப்பு பணிகளை செய்யும் பொறுப்பாளர்கள் இடையே ஆலோசனை அவசியம் என்று தெரிவித்தார்.

இது தான் ஜனநாயகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே வெடித்துள்ள மோதல் பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. எதிர்க்கட்சிகள், ஆளும் மாநில ஆளுநர்களின் அத்துமீறல் குறித்து ஆலோசிக்க முதல்வர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மம்தா உட்பட பல தலைவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: