இருளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா: டிஆர்ஓ வீடு வீடாக ஆய்வு

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர்  தாலுகா கீரப்பாக்கம் ஊராட்சி கீரப்பாக்கம் கிராமம் கன்னியம்மன் கோயில் தெருவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் 43 இருளர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக, கடந்த மாதம் சர்வே செய்யப்பட்டது. இதில், கொத்து மலை அரசு புறம்போக்கு நிலமாக இருந்ததை, தற்போது நத்தம் புறம்போக்கு நிலமாக வகைப்பாடு மாற்றப்பட்டு அனைத்து கோப்புகளும் தயார் நிலையில் உள்ளன.  இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் இருளர் மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மானுவேல்ராஜ், வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், துணை தாசில்தார் ஏழுமலை ஆகியோர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில், வீடு வீடாக சென்ற அதிகாரிகள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுஉள்பட பல்வேறு ஆவணங்களை சரி பார்த்தனர்.

Related Stories: