ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தமிழக கவர்னரின் மகள் திருமணம்: வரும் 21, 22ம் தேதி நடக்கிறது

ஊட்டி: தமிழக கவர்னர் மகளின் திருமணம் பிப்.21, 22 ஆகிய இரு நாட்கள் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் நடக்க உள்ளது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் மகள் திருமணம் ஊட்டியில் வருகிற 21, 22ம் தேதிகளில் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருமண முன் ஏற்பாடுகளை மேற்கொள்ள 8 நாள் பயணமாக தமிழக கவர்னர் நேற்று கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் அவர் ஊட்டி ராஜ்பவன் மாளிகை வந்தடைந்தார். அங்கு அவரை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், எஸ்பி ஆஷிஷ் ராவத் ஆகியோர் மலர் கொத்து வழங்கி வரவேற்றனர். ராஜ்பவன் மாளிகையில் திருமணம் நடக்கும் நிலையில், மாளிகை வர்ணம் பூசப்பட்டு பொலிவுபடுத்தப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு 24ம் தேதி மீண்டும் கவர்னர் சென்னை திரும்புகிறார்.

Related Stories: