186வது வார்டு பகுதி மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சமுதாயக்கூடம்: திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் உறுதி

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் 186வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் நேற்று புழுதிவாக்கம் ராஜ ராஜேஸ்வரி நகர், கிருஷ்ணராஜ் நகர், அண்ணாமலை தெரு, பகத்சிங் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், ‘‘தமிழக முதல்வரின் அனைத்து திட்டங்களையும் நமது வார்டுக்கு பெற்று தருவேன். பூங்காக்களை சீரமைப்பேன், இளைஞர்களுக்கு உடற்பயிற்சி மையம், பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சமுதாய நலக்கூடம் அமைத்து தருவேன், சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்,’’ என்றார்.

186வது வட்ட திமுக பொறுப்பாளர் குமாரசாமி, வழக்கறிஞர் கமலநாதன், முன்னாள் கவுன்சிலர் புனிதன் ஜனார்த்தனன், ராமமூர்த்தி, லட்சுமணன், சுப.சரவணன், கோட்டீஸ்வரன், மகேஸ்வரன், குபேரா, யோகராஜன், ஆர்.மணிகண்டன், ரகுபதி, பி.எம்.தினேஷ், மதுசூதனன், ரமேஷ், முரளி, பாண்டு, ஜி.பி.சரவணன், கார்த்திக், மவுண்ட் தீனா, எம்.சம்பத்குமார், பி.விஜயகுமார், மகளிரணி சங்கீதா, வசுமதி, சுபஸ்ரீ, கலா, வனிதா, காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் லோகநாதன், வட்ட தலைவர் பி.குமார், மாவட்ட பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரிக்கிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: