திமுக வேட்பாளர் காமராஜை ஆதரித்து எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டு திமுக வேட்பாளரான தாம்பரம் நகர முன்னாள் துணை தலைவர் காமராஜை ஆதரித்து தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று தேர்தல் பரப்புரை கூட்டம் நடந்தது. இதில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா பங்கேற்று பேசுகையில், ‘‘திமுக வேட்பாளர் காமராஜ் வெற்றி பெற்றவுடன் தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்படும், தினசரி இல்லங்கள்தோறும் குப்பை சேகரிக்கப்படும், சண்முகம் சாலை - ஜிஎஸ்டி சாலை இணைக்கப்படும், முத்துரங்க பூங்கா சீரமைத்து பராமரிக்கப்படும். ரேஷன் கடைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை பணிகள் 6 மாதங்களில் முடிக்கப்படும், சாலைகள் சீரமைக்கப்படும், தாம்பரம் மார்க்கெட் பகுதியில் அடுக்குமாடி கார் பார்க்கிங், அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும்.

முதியோர், ஆதரவற்றோர், கணவரை இழந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்,’’ என்றார். கூட்டத்தில் பா.பாரதி, கோ.ராஜேந்திரன், பட்டுராஜா, கந்தசாமி, சீனா, ஜின்னா, மைக்கேல், விக்கி (எ) யுவராஜ், பா.ஹரீஷ், எம்.ரமேஷ், பாஸ்கர், க.ஹரிஷ் குமார், ராமசந்திரன், சூரியா, எஸ்.ரமேஷ், கோபி, சிட்டி, அரவிந்த், ஹரிஹரன், பிரபு, வினோத், யுவராஜ், மகளிர் அணியை சேர்ந்த கோமதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: