×

காங்கிரஸ் வேட்பாளர் டில்லிபாபுவை ஆதரித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பிரசாரம்

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட 37வது வார்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளரான வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு நேற்று கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவருடன் பங்கேற்று வீதி வீதியாக சென்று டில்லிபாபுவுக்கு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து வேட்பாளர் டில்லிபாபு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தினமும் வார்டு முழுவதும் சென்று, மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறேன். செல்லும் இடமெங்கும் மக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். அதே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு தெரிவிக்கப்பட்ட குறைகள் அனைத்தையும் குறிப்பெடுத்து வைத்துள்ளேன். வெற்றி பெற்றதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து கண்டிப்பாக ஒவ்வொரு பிரச்னையாக தீர்த்து வைப்பேன். குறிப்பாக பொதுமக்கள் சாலை வசதி மற்றும் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னை, பாதாள சாக்கடை அடைப்பு, கொசுத்தொல்லை உள்ளிட்டவற்றை அதிகமாக கூறியுள்ளனர். அதனை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் துணையோடு விரைந்து தீர்த்து வைப்பேன்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் மற்றும் திமுகவினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags : Minister ,BK Sehgarbabu ,Congress ,Dillibabu , Minister BK Sehgarbabu campaigns in support of Congress candidate Dillibabu
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...