×

ஆமிர்கான் படம் மீண்டும் தள்ளிப்போனது

மும்பை: ஆமிர்கான் நடித்துள்ள லால் சிங் சட்டா என்ற படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி இறுதியில் இருந்து ஏப்ரல் மாதம் வரை அடுத்தடுத்து பல பெரிய படங்கள் திரைக்கு வருகின்றன. இதற்கிடையில் ஆமிர்கான், கரீனா கபூர், நாகசைதன்யா நடித்த லால் சிங் சட்டா இந்தி படம், கடந்த ஆண்டு டிசம்பரில் திரைக்கு வர இருந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக இப்படம் ஏப்ரல் 14ம் தேதிக்கு தள்ளிப்போடப்பட்டது. இந்நிலையில், இப்போது ஏப்ரலுக்கு பதிலாக ஆகஸ்டு 11ம் தேதி படம் ரிலீசாகும் என்று ஆமிர்கான் தெரிவித்துள்ளார். பல பெரிய படங்கள் வருவதாலும், தங்களுக்கான தியேட்டர்கள் சரிவர கிடைக்காததாலும் இந்த முடிவை ஆமிர்கான் எடுத்துள்ளார். இப்படத்தை அவரே தயாரித்துள்ளார்.

Tags : Aamir Khan , The Aamir Khan film was postponed again
× RELATED தங்கல் படத்தில் ஆமிர்கான் மகளாக நடித்த நடிகை சுஹானி திடீர் மரணம்