×

சாதி அடையாளத்துடன் படம் எடுக்கிறார்கள்: இயக்குனர் அமீர் வருத்தம்

சென்னை: ஒன்பது வருடங்களுக்குப் பிறகு அமீர் இயக்கும் படம், இறைவன் மிகப் பெரியவன். இயக்குனர் வெற்றி மாறன், எழுத்தாளர் தங்கம் கதை எழுதியுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுகங்கள் நடிக்கின்றனர். இப்படம் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள், இந்துக்கள் இடையிலான உறவை சொல்லும் படமாக உருவாகிறது. இதன் அறிமுக விழாவில் அமீர் பேசியதாவது: கதாசிரியரிடம் கதை வாங்கி, அதை இயக்குனர்கள் இயக்குவதை இங்கு ஒருமாதிரியாகப் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. பாரதிராஜா பல கதைகளை மற்றவர்களிடம் வாங்கி படமாக்கினார். எல்லோரும் இணைந்து பணியாற்றும் ஒரு டிரெண்டை உருவாக்க வேண்டும் என்பதற்காக, இந்தப் படத்தின் கதையை வெற்றிமாறனிடம் வாங்கி நான் இயக்குகிறேன். இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக கட்டமைக்கும் பழக்கம் இருக்கிறது. இன்றைக்கு புதிதாக படம் இயக்க வருபவர்கள் தங்கள் சாதி அடையாளங்களை, அரசியல் அடையாளங்களையே முன்னிறுத்துகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் இது மோசமான விஷயமாக இருக்கிறது. அதற்காகவே இப்படத்தை இயக்க முடிவு செய்தேன். இப்படம் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இருக்கும் அழகான உறவை சொல்ல வருகிறது. நமக்கு அக்கம் பக்கத்தில் நடப்பவற்றை சேகரித்து திரையில் தரப்போகிறேன். ஓட்டுக்காக பகைமையை உண்டாக்காதீர்கள் என்று சொல்லப்போகிறேன்.


Tags : Aamir Sad , Filming with caste identity: Director Aamir Sad
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை