×

ரூ.9 கோடி மதிப்பு சொத்துக்கள் ஏழுமலையானுக்கு காணிக்கை

திருமலை: சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் ரேவதி விஸ்வநாத். இவருடைய சகோதரி பர்வதம். இவர் கடந்தாண்டு மே மாதம் இறந்தார். இவருக்கு சென்னை திருவான்மியூரில் ஒரு வீடும், உத்தண்டியில் ஒரு வீடும் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 கோடி. மேலும், வங்கியில் ரூ.3.20 கோடி டெபாசிட்டும் வைத்திருந்தார். தனது மறைவுக்குப் பிறகு தனது சொத்துகள், பணத்தை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு காணிக்கையாக கொடுக்கும்படி பர்வதம் கடைசி விருப்பமாக தெரிவித்து இருந்தார். அதன்படி, இந்த வீடுகளுக்கான ஆவணங்களையும், வங்கி டெபாசிட் ஆவணங்களையும் திருப்பதி கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டியிடம் நேற்று மருத்துவரான ரேவதி விஸ்வநாத் வழங்கினார்.


Tags : Ezhumalayan , Property worth Rs 9 crore donated to Ezhumalayan
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...