×

யாஷ் துல் அதிரடி சதம்: டெல்லி ரன் குவிப்பு

கவுகாத்தி: ரஞ்சி கோப்பையில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் யு-19 அணியின் கேப்டன் யாஷ் துல் சதம் விளாசியதால் டெல்லி 7 விக்கெட் இழப்புக்கு 291ரன் குவித்துள்ளது. ரஞ்சி கோப்பை தொடர் டெஸ்ட் ஆட்டங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நேற்று தொடங்கின. தமிழ்நாடு-டெல்லி இடையிலான ஆட்டம் கவுகாத்தியில் நடக்கிறது. டாஸ் வென்ற தமிழ்நாடு பந்து  வீச்சை தேர்வு செய்தது. அதனையடுத்து முதலில் களம் கண்ட டெல்லி 3ஓவரில் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து வந்த நிதிஷ் ராணா 25 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் தொடக்க ஆட்டக்காரான, யு-19 அணியின் கேப்டன் யாஷ் துல், ஜோன்தி சித்து இணை பொறுப்பாக விளையாடியது. அவர்கள் 3வது விக்கெட்டுக்கு 119ரன் சேர்த்தனர். சதம் விளாசிய யாஷை 113 ரன்னில் வெளியேற்றினார் முகமது.  

அரைசதம் கடந்த ஜோன்தியை 71ரன்னில் ஆட்டமிழக்க செய்தார் அபரஜித். விக்கெட்கள் விழுந்தாலும் ஸ்கோர் உயர்ந்த வண்ணம் இருந்தது. அதனால் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் டெல்லி 90ஓவருக்கு 7 விக்கெட்களை இழந்து 291ரன் குவித்தது.  லலித் 45*, சிம்ரஜித் 16* ரன்னுடன் களத்தில் உள்ளனர். தமிழ்நாடு தரப்பில் முகமது, அபரஜித், வாரியர் தலா 2 விக்கெட்களையும், கேப்டன் விஜய் சங்கர் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். ரகானே சதம்: இந்திய டெஸ்ட் அணியில் இனி இடம் பிடிப்பது கேள்விக் குறியான நிலையில், தங்கள் திறமையை நிரூபிக்க ரகானே, புஜாரா இருவரும் ரஞ்சி தொடரில் களமிறங்கி உள்ளனர். மும்பை அணிக்காக விளையாடும் ரகானே முதல் நாளான நேற்று ஆட்டமிழக்காமல் 108*ரன் குவித்து தனது இடத்தை உறுதி செய்துள்ளார். எதிர்த்து களமிறங்கி உள்ள சவுராஷ்டிரா அணியில்தான் புஜாரா விளையாட உள்ளார்.


Tags : Yash Dul , Yash Dul Action Century: Delhi Run Accumulation
× RELATED சில்லி பாயிண்ட்