திண்டுக்கல்லில் திமுக வேட்பாளரை ஆதரித்து அஜித் ரசிகர்கள் பிரசாரம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் திமுகவினர் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இங்கு 1வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துப்பாண்டி, அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் ஐ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதன்மூலம் 1வது வார்டில் திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.  இந்நிலையில் 14வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அஜித்குமார் ரசிகர்கள் முத்துக்குமார், விக்னேஷ், பிரபு ஆகியோர் கூறுகையில், ‘‘வேட்பாளர் சரவணன் அஜித் ரசிகர். அவர் வீட்டில் இருந்ததை விட பொது இடங்களில் சமூக சேவையில் ஈடுபட்டிருந்த நாட்கள் தான் அதிகம். எனவேதான், அவருக்காக நாங்கள் தொடர்ந்து ஓட்டு கேட்டு வருகிறோம். அவர் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது நிச்சயம்’’ என்றனர்.

Related Stories: