×

மன்னர் ஆட்சி காலத்தில் எழுச்சியுடனும், உணர்ச்சியுடனும் இருந்த ஊர்தான் திருநெல்வேலி!: திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்..!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நெல்லை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

மன்னர் ஆட்சி காலத்தில் எழுச்சியுடனும், உணர்ச்சியுடனும் இருந்த ஊர்தான் திருநெல்வேலி:

மன்னர் ஆட்சி காலத்தில் எழுச்சியுடனும், உணர்ச்சியுடனும் இருந்த ஊர்தான் திருநெல்வேலி என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சுதந்திரத்திற்காக போராடிய வீரமங்கை வேலுநாச்சியாரை, அவர் என்ன ஜான்சி ராணியா? என ஒன்றிய அதிகாரிகள் கேள்வி கேட்டனர். வேலுநாச்சியார் அமர்ந்திருந்த குதிரையின் நிறத்தை பழுப்பு நிறமாக மாற்றுங்கள் என கூறி குடியரசு விழா ஊர்தி நிராகரிக்கப்பட்டது.

நெல்லை என்றால் முதலில் நினைவுக்கு வருவது நெல்லையப்பர் கோயில் தான்:

நெல்லை என்றால் முதலில் நினைவுக்கு வருவது நெல்லையப்பர் கோயில் தான். மாவீரர்களை கொடுத்த நெல்லை சீமையில் பெருமிதத்தோடு ஆதரவு கேட்கிறேன். நெல்லையப்பர் கலைக்கூடம் அமைக்கும் பணி நடந்ததும் கலைஞர் ஆட்சியில் தான். 1973ல் நெல்லையில் ஈரடுக்கு பாலம் அமைத்து திருவள்ளுவர் பாலம் என பெயர் சூட்டியவர் கலைஞர் தான். 1920களில் நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி தீர்மானத்தை வ.உ.சி.யும், பெரியாரும் நிறைவேற்றினர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிவியை பார்த்து அறிந்துகொண்டேன் என்றவர் எடப்பாடி:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை டிவியை பார்த்துதான் அறிந்துகொண்டேன் என்றவர் எடப்பாடி பழனிசாமி. சாத்தான்குளம் சம்பவத்தால் காவல் நிலையத்தை வருவாய் துறையிடம் ஒப்படைத்தது அதிமுக ஆட்சியில் தான். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தும் விடுவித்தது யார் என்று கேள்வி எழுப்பினார். இரண்டே மாதங்களில் 100 கொலைகள் நடந்தது அதிமுக ஆட்சியில் தான்.

அதிமுக ஆட்சியில் தான் சட்ட ஒழுங்கு:

அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீரழித்தவர்கள் தற்போது திமுகவுக்கு பாடம் எடுக்க வருகின்றனர். தலைமை செயலகத்தில் சோதனை நடந்தது அதிமுக ஆட்சியில் தான். ஜெயலலிதா மறைவுக்கு பின் 2017ல் கொடநாட்டில் காவலாளி கொல்லப்பட்டார். கொடநாடு கொலை வழக்கில் அடுத்தடுத்து 5 பேர் மர்மமான முறையில் மரணமடைந்தனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை யாரும் மறக்கவில்லை.

ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையில் உண்மை வெளிவரும்:

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக அமைக்கப்பட்ட நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் செயல்பட போகிறது. சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம்; அதுதான் திமுகவின் முழக்கம்.

13 லட்சம் பேருக்கு நகைக்கடன் ரத்து செய்யப்பட்டது:

13 லட்சம் பேருக்கு நகைக்கடன் ரத்து செய்தோமா இல்லை என பயனாளிகளை கேளுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டலைன் சூளுரைத்தார்.

மகளிருக்கு இலவச பஸ்-நெஞ்சுக்கு நெருக்கமான திட்டம்:

மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச அனுமதி அளிக்க உத்தரவிட்டது தான் நெஞ்சத்துக்கு நெருக்கமான திட்டம். மக்களோடு மக்களாக நாள்தோறும் இருந்து அறிவித்த திட்டத்தை ஆய்வு செய்து வருகிறேன். அரசு பேருந்துகளில் இதுவரை 77.66 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இல்லத்தரசிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் உள்ளிட்டோர் அரசு பேருந்தில் இலவசமாக செல்வதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். சொன்னதை செய்வோம்; செய்வதை சொல்வோம் என்பது தான் திமுக அரசின் கொள்கை என்று குறிப்பிட்டார்.

* 7.5 சதவீதம் சிறப்பு உள்ஒதுக்கீட்டின் மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்பில் சேர்க்கை அளிக்கப்பட்டுள்ளது.

* 12,959 கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது.

* 13 லட்சம் பேரின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

* அரசு பணியாளர்களுக்கு 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

* மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்வுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* 58,429 மகளிர் குழுக்களை சேர்ந்த 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை கடனாளி மாநிலமாக மாற்றியது அதிமுக தான்:

தமிழ்நாட்டை கடனாளி மாநிலமாக மாற்றியது அதிமுக தான். 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வரும் போது தமிழ்நாட்டின் கடன் 1 லட்சம் கோடியாக தான் இருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்தரை லட்சம் கோடியாக தமிழ்நாட்டின் கடன் தொகை உள்ளது. தமிழ்நாட்டுக்கு கடன்சுமையை அதிகரித்து சென்று அவமான சின்னமாக்கிவிட்டது அதிமுக ஆட்சி.

Tags : Thirunelveli ,Stalin , Nellai, Nellaiyappar Temple, DMK, MK Stalin's campaign
× RELATED நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம்...