புரோ கபடி: தமிழ் தலைவாஸ் 10வது தோல்வி : தெலுங்கு டைட்டன்சை ஜெய்ப்பூர் துவம்சம் செய்தது

பெங்களூரு:பெங்களூரில் 12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 122-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 21-51 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்சிடம் படுதோல்வி அடைந்தது. பெங்கால் அணியில் மனீந்தர் சிங் 14 புள்ளிகளும், முகமது நபி பாக்ஷ் 13 புள்ளிகளும் எடுத்தனர். தமிழ் தலைவாஸ் தொடர்ச்சியாக சந்தித்த 6-வது தோல்வியாகும். மொத்தத்தில் தலைவாஸ் அணி 21 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 10 தோல்வி, 6 டை என்று 47 புள்ளிகளுடன் 11-வது இடத்துக்கு தள்ளப்பட்டதுடன், ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்துவிட்டது.

மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் ஜெய்ப்பூர் அணி, தெலுங்கு டைட்டைன்சை துவம்சம் செய்து 54-35 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றிபெற்றது. இன்று இரவு 7.30 மணிக்கு உ.பி.யோத்தா- யு மும்பா அணிகளும், 8.30 மணிக்கு பெங்களூருபுல்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகளும், 9.30 மணிக்கு தபாங் டெல்லி- பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதுகின்றன.

Related Stories: