குருவாயூர் கோயில் திருவிழாவில் யானை ஊர்வலத்தில் கிருஷ்ணர் பவனி: சசிதரூர் எம்.பி. தாயுடன் சாமி தரிசனம்

பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் மாசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் உற்சவர் யானை மீது கோயிலை சுற்றி பவனி வருகிறார். தொடர்ந்து விசேஷ பூஜைகளும் மூலவருக்கு நடைபெற்று வருகின்றன. திருவிழாவையொட்டி குருவாயூர் கோயில் வளாகத்தில் கூத்தம்பலம் மண்டபத்தில் உற்சவர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் நீண்ட வரிசையாக நின்று தரிசனம் செய்தனர். கேரள எம்.பி. சசிதரூர், அவரது தாய் லில்லி தரூர் ஆகியோர் குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகி வினயன், பிஆர்ஓ விமல்நாத் மற்றும் அதிகாரிகள் சசிதரூருக்கு வரவேற்பு அளித்தனர். பாலக்காடு, கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய அரசு பஸ் டெப்போக்களில் இருந்து பக்தர்கள் வசதிக்காக குருவாயூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

Related Stories: