வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின்நிலையங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை: வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின்நிலையங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. வடசென்னை அனல் மின்நிலையங்களில் 1-வது நிலை 3-வது அலகில் மீண்டும் 210 மெகா  வாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. அனல் மின்நிலையத்தில் டர்பைன் பகுதியில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக 1-வது நிலை 3-வது அலகில் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. வல்லூர் அனல் மின்நிலையங்களில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் 500 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது

Related Stories: