கும்மிடிப்பூண்டியில் 6 இடங்களில் காணொலி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் 6 இடங்களில் காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 6 இடங்களில் ஏற்பாடு செய்த அரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து காணொலி காட்சி மூலம் நேற்று பிரசாரம் செய்தார்.கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தேர்தலில் திமுக சார்பில் 14 வார்டுகளிலும், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 1வது வார்டிலும் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்து கும்மிடிப்பூண்டி லட்சுமி மண்டபம், சிவம் ஜி.ஆர்.மண்டபம், கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, எம்.ஆர்.எப். ஷோரூம் எதிரே விவேகானந்தா நகர், காட்டுக்கொல்லை தெரு ஆகிய 6 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் பிரசாரம் செய்தார்.  

நிகழ்வின்போது மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலங்களிலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் செய்யப்பட்ட சாதனைகளை எடுத்துக்கூறி, திமுக ஆட்சி காலத்தில் சாதனைகளை இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு பெரிய வெற்றியை பெற்று தரும் என்றார்.திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் கி.வே.ஆனந்தகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், நகர செயலாளர் அறிவழகன், பொறுப்பு குழு உறுப்பினர்கள் ரவி வெங்கடாஜலபதி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் பரிமளம், பாஸ்கரன், கே.ஆறுமுகம், மோகன் பாபு, ஒன்றிய துணை செயலாளர்கள் திருமலை, சுகு, கணேசன், வேதாச்சலம், மஸ்தான், மாவட்ட கவுன்சிலர்கள் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயச்சந்திரன், ஜோதி, அமலாசரவணன், மாவட்ட பிரதிநிதிகள் காளத்தி, இஸ்மாயில், கிழ்முதலம்பேடு தலைவர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

Related Stories: