×

தேசிய அளவிலான வாக்காளர் தின போட்டிகள்: மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை.இந்திய தேர்தல் ஆணையம், 2022ம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தையும், ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டின் மூலம் மீண்டும் வலியுறுத்தும் வகையில் எனது வாக்கு எனது எதிர்காலம் - ஒரு வாக்கின் வலிமை என்ற தலைப்பின் கீழ் வினாடி வினா, வாசகம் எழுதுவது, பாட்டு, காணொளிக்காட்சி தயாரிப்பு, விளம்பர படம் வடிவமைப்பு என 5 வகை போட்டிகளை தேசிய அளவில் ஜனவரி 25 முதல் மார்ச் 15 வரை நடத்துகிறது.

இப்போட்டியில், நிறுவனம் சார்ந்த வகையினர், தொழில்முறையினர், தொழில் சாராதவர் என 3 வகை பிரிவினர் கலந்து கொள்ளலாம். இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.மேலும் வெற்றி பெறுபவர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் பொருட்கள் மற்றும் பேட்ஜ் வழங்கப்படும், முதல் 3 நிலைகளை கடந்த அனைத்து போட்டியாளர்களுக்கும் கணினி வழி சான்றிதழ் வழங்கப்படும்.இதில் வயது வரம்பின்றி ஆர்வமுள்ள, நபர்கள் அனைவரும் இந்திய தேர்தல் ஆணையத்தின் https://ecisveep.nic.in / contest என்ற மின்அஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும் படைப்பாளர்கள் தங்களது விவரங்கள் மற்றும் படைப்புகளை மார்ச்15ம் தேதிக்குள் voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Tags : National Level Voter Day Contests , National level Voter's Day Contests: Apply by March 15
× RELATED தேசிய அளவிலான வாக்காளர் தின போட்டிகள்: மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்