×

தமிழகத்தில் நிலத்தடி நீர் குறைந்த பகுதிகளில் நபார்டு வங்கியின் நிதியுதவி மூலம் 100 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் திட்டம்

* விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
* நீர்வளத்துறை உயர் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் நீராதாரங்களை பெருக்க ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான 200 தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவிப்புகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டன. இதை தொடர்ந்து பருவமழை காலங்களில் 34 பெரிய ஆறுகளில் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தடுப்பணை அமைப்பதற்கான இடங்களை கண்டறியும் உத்தரவிடப்பட்டன. அதன்பேரில், பருவமழை காலங்களில் சென்னையில் முக்கிய ஆறுகள் மூலம் பல டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இதை தடுத்து, சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொசஸ்தலையாறு, பாலாறு, கூவம், அடையாற்றில் 9 இடங்களில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தையும் இதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், மாநிலம் முழுவதும் ஏற்கனவே, 22 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கான திட்டம் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, தடுப்பணை தேவைப்படும் இடங்களில் கட்டுவதற்காக ஆய்வு பணிகளை மேற்கொள்ள நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், கடந்த மழை காலங்களில் அதிகளவில் நீர் வீணாக கடலில் கலந்த ஆற்றுப்படுகைகள் மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்தும் இந்த தடுப்பணை அமைக்கும் இடங்களை தேர்வு செய்யப்பட்டன. அதன்பேரில் மாநிலம் முழுவதும் 200 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்து, அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டன. இதில், நிலத்தடி நீர் குறைவாக உள்ள பகுதிகளில் முக்கியத்துவம் அளித்து முதற்கட்டமாக 100 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கான அறிக்கையை தமிழக அரசிடம் நீர்வளத்துறை சார்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே, முதற்கட்டமாக 100 இடங்களில் தடுப்பணை அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வெளியாகிறது. தொடர்ந்து, இப்பணிகளுக்காக அரசு நிதியை பெற்று வரும் வடகிழக்கு பருவமழை கால கட்டத்திற்குள் தடுப்பணை அமைக்கும் பணிக்கு திட்டமிட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : NABARD Bank ,Tamil Nadu , In low water areas in Tamil Nadu With the financial assistance of NABARD Plan to build dams at 100 locations
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...