×

மசினகுடியில் காட்டு யானைக்கு தீவைத்த வழக்கு ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் நீதிமன்றத்தில் சரண்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மசினகுடி பகுதியில் சுற்றித் திரிந்த எஸ்ஐ என்ற ஆண் காட்டு யானை கடந்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி தீக்காயத்துடன் காது கிழிந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த நிலையில் மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே இரவு நேரத்தில் யானை சென்றதும், அப்போது சிலர் அந்த யானையின் மீது எரியும் தீப்பந்தத்தை வீசியதும், தீக்காயத்துடன் வலி தாங்க முடியாமல் கதறி துடித்தபடி யானை ஓடும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை வைத்து விசாரணை நடத்தியதில் யானை மீது தீப்பந்தம் வீசியது மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியைச் சார்ந்த மல்லன் என்பவரது மகன்களான ரிக்கி ராயன் (31), ரேமண்ட் டீன் (28), அதே பகுதியைச் சார்ந்த பிரசாந்த் (36) என்பது தெரியவந்தது. இவர்களில் ரேமண்ட் டீன், பிரசாந்த் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைதாகினர். தலைமறைவான ரிக்கி ராயனை வனத்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கூடலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதனைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Charan ,Machinagudi , Case of setting fire to a wild elephant in Machinakudi Headlong for a year Who surrendered in court
× RELATED வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை...