வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்பு

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அத்திகானூர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது வீட்டில் 6 அடி நீளம் கொண்ட பாம்பு நேற்று மாலை புகுந்தது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலை அலுவலர் பிரபாகரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர்.

பின்னர் ரவியின் வீட்டின் முன்பகுதியில் உள்ள பொருட்களுக்குள் பாம்பு பதுங்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்து கருவிகள் மூலம் பாம்பை தீயணைப்பு துறையினர் லாவகமாக பிடித்தனர். இதையடுத்து பாம்பு காப்புக்காட்டில் விடுவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: