×

ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்த 1150 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை:  சென்னை மாநகரத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்களின் கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் துறை இயக்குநர் ஆபாஷ்குமார் உத்தரவின் பேரில் சென்னை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் முகேஷ்ராவ் வழிகாட்டுதலின் படி சென்னை தெற்கு அலகு காவல் உதவி ஆய்வாளர் மதன்குமார் காவலர்களுடன் 15.02.2022-ம் தேதி ரேசன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பல்லவன் சாலை, சத்தியவானி முத்து நகர் பாலம் பகுதியில் ஆய்வு செய்தார்.

அப்போது பாலத்தின் கீழ் இரயில் மூலம் கடத்தி செல்வதற்காக தழிழக அரசால் வழங்கப்படும் பொதுவிநியோகத்திட்ட ரேசன் அரிசி சுமார் 50 கிலோ எடை கொண்ட 23 மூட்டைகள் என மொத்தம் 1150 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த யாலகுல சுரேஷ் பாபு என்பவரை கைது செய்ததோடு, ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்த 1150 கிலோ பொது விநியோக திட்ட ரேசன் அரிசியை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டார். இது போன்ற கடத்தலில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : AP , AP, smuggler, ration rice, confiscated
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?