×

திருச்சி-காரைக்குடி இடையே சோதனை ஓட்டம், ரயில் பாதையை கடக்க வேண்டாம் : ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

காரைக்குடி :  திருச்சி-காரைக்குடி இடையே மின்மயமாக்கல் பணி முடிந்து நாளை சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதால், மாலை பொதுமக்கள் ரயில்பாதையை கடக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, திருச்சி-காரைக்குடி இடையே 89 கிலோ மீட்டருக்கு மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்த ரயில்பாதையில் பொங்களூரு தென்சரக ரபில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் நாளை ஆய்வு நடத்தவுள்ளார். திருச்சியிலிருந்து காலை 9.5க்கு புறப்படும் ஆய்வு ரயில் வழியில் ரயில் நிலையங்கள், ரயில்வே கேட்டுகள், மேம்பாலங்கள், தமிழ்நாடு மின்சார வாரிய மின் வழித்தட குறுக்கீடு. உப மின்நிலையங்கள் ஆகியவற்றில் ஆய்வு நடத்தவுள்ளார்.

ஆய்வில் முதன்மை மின் பொறியாளர் ஆர்கேமேத்தா, மின்மயமாக்கல் திட்ட மேலாளர் சமீர் டிஹே, மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆய்வு ரயில் மாலை 3.20க்கு காரைக்குடி ரயில் நிலையத்துக்கு வரும். பின்னர் காரைக்குடி திருச்சி இடையே மின்சார இன்ஜின் பொறுத்தப்பட்ட ரயில் மூலம் வேக சோதனை ஓட்டம் நடத்தப்படும். எனவே பொதுமக்கள், ரயில் பாதை அருகே வசிப்போர் மாலை 3 மணி முதல் 6 மணி வரை ரயில் பாதையை கடக்கவோ, அருகில் நெருங்கவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tiruchi-Karakudi ,Railway Administration , Trichy-Karaikudi. Between. Test flow
× RELATED யுடிஎஸ் செயலியில் முன்பதிவில்லா...