×

பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சி முதல்வர்கள் ஒருங்கிணைப்பு: 20ம் தேதி உத்தவ்- சந்திரசேகர ராவ் சந்திப்பு

ஐதராபாத்: பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சி மாநில முதல்வர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்வாக வரும் 20ம் தேதி உத்தவ் தாக்ரேவை சந்திரசேகர ராவ் சந்திந்து ஆலோசனை நடத்துகிறார். ஆளும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளாத மாநிலங்கள் புறக்கணிப்பு, எதிர்கட்சி மாநில முதல்வர்களின் நிர்வாக விசயத்தில் ஆளுநர்கள் தலையீடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இந்த சந்திப்பின் போது முதல்வர்கள் பேசவுள்ளனர்.

சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாநில ஆளுநர்களால் ஏற்படும் நிர்வாக தலையீடுகள் குறித்தும், எதிர்கட்சிகளை சேர்ந்த முதல்வர்கள் டெல்லியில் சந்திப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை வரும் 20ம் தேதி மும்பையில் சந்திக்கிறார்.

இதுகுறித்து சந்திரசேகர ராவ் கூறுகையில், ‘கூட்டாட்சி நீதிக்காக நடத்தும் போராட்டத்திற்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதில் முக்கியப் பங்காற்றுவேன். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்’ என்றார்.


Tags : BJP ,Uttam- ,Chandrasekara ,Rao , BJP, Opposition Chief Minister, Coordinating, Chandrasekara Rao
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...