×

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர் அசத்தல்: 26 பதக்கங்களுடன் நார்வே அணி பட்டியலில் முதல் இடம்

பெய்ஜிங்: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நிறைவடைய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் 12 தங்கம் உள்ளிட்ட 26 பதக்கங்களுடன் நார்வே அணி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஜெர்மன் மற்றும் அமெரிக்க அணிகள் முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களை பிடித்துள்ளன. சீனாவில் நடைபெறும் பெல்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் வரும் 20 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், முக்கிய போட்டிகள் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று நடந்த பாப்ஸ்லீ பிரிவு ஆடவர் குழு பனிச்சறுக்கு போட்டியில் ஜெர்மன் வீரர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை குவித்து சாதித்து இருக்கின்றனர்.

யான்கிங் பனிப்பிரதேசத்தில் நடந்த போட்டியில் இருவர் அமர்ந்து சறுக்கும் வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்று தனித்தனியாக 3 பதக்கங்களையும் ஜெர்மனி வீரர்கள் அள்ளியுள்ளனர். ஜாங்ஜியாகோவ் நகரில் நடந்த ஆடவர் 10 கி.மீ கிராஸ் கன்ட்ரி பிரிவு பனிச்சறுக்கு போட்டியில் சர்வதேச வீரர்கள் வெற்றி இலக்கை நோக்கி பாய்ந்தோடி வந்தனர். -12 டிகிரி குளிர் நிலையில் பந்தய தூரத்தை 3 மணிநேரம் 56 நிமிடங்கள் 40 நொடிகளில் முதலாவதாக கடந்து நார்வேயின் ஜோர்கன் கிராபக் தங்க பதக்கத்தை வென்றார். ஜப்பான் மற்றும் ஜெர்மனி வீரர்கள் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை கைப்பற்றினர்.

ஜாங்ஜியாகோவ் நகரில் நடந்த ஆடவர் ஏரியில் ஃப்ரீ ஸ்டைல் பனிச்சறுக்கு தகுதி போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் சீன வீரர் கும்ஃபூ கி 127 புள்ளி, 8-8 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தார். மற்றொரு சீன வீரர் சோம்யாங் மற்றும் உக்ரைன் வீரர் அலெக்ஸ்சாண்டர் ஒக்கென்யூ முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களை கைப்பற்றினார். ஜாங்ஜியாகோவ் நகரில் நடந்த ஆடவர் ஐஸ் ஹாக்கி பிளே ஆப் சுற்றில் கனடா ஆணை அபார வெற்றி பெற்றது. சீனாவுக்கு எதிரான போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கனட வீரர் கோல் மழை பொழிந்தனர்.

இறுதியில் 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தினர். கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடர் தற்போது 12 நாட்கள் கடந்துள்ள நிலையில் நார்வே அணி 12 தங்கம், 7 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி அணி 9 தங்கம், 6 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் 2-வது இடத்தில்  உள்ளது. அமெரிக்கா 7 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்திருக்கிறது.    


Tags : Beijing Winter Olympics Series , Beijing, Cool, Olympic, 26 medal, Norway, list, first, place
× RELATED ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியான...