×

தமிழகத்தில் மாசிமகம் திருவிழா கோலாகலம்: மாமல்லபுரத்தில் கன்னியம்மனுக்கு பூஜை நடத்திய இருளர் இன மக்கள்

செங்கல்பட்டு: மாசி மகத்தை ஒட்டி இருளர் இன மக்கள் மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்று கூடி பாரம்பரிய முறையில் கன்னியம்மனுக்கு பூஜை செய்து கொண்டாடினர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் சமூகத்தினர் மாசி மாத பௌர்ணமி நாளில் குடும்பத்துடன் ஒன்று கூடுவது வழக்கம். கடற்கரையில் ஆங்காங்கே புடவைகள் மற்றும் தென்னங்கீற்றுகள் ஆகியவற்றை கொண்டு திறந்தவெளியில் குடில்கள் அமைத்து கன்னியம்மனை வழிபட்ட அவர்கள் நேர்த்திக்கடனும் செலுத்தினர். திருமணம், மொட்டையடித்து காது குத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன்-வள்ளியம்மை திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் இருளர் சமுதாயத்தினர் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழாவில் 1000-கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். 11 நாட்கள் நடைபெறும் மாசி மக திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

9-வது நாளான இன்று விநாயகர், விருத்தகிரீஸ்வரர் உள்ளிட்ட 5 உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 10ம் நாள் திருவிழாவில் மாசி மக உற்சவத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனத்தில் வீதி உலா வந்து மணிமுக்தா ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. 18 தேதி இரவு புதுப்பேட்டை அம்மன் குளத்தில் தெப்பத்திருவிழாவுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.            


Tags : Maasimakam Festival Kolagalam ,Kannyamman ,Mamallapuram , Tamil Nadu, Masimagam, Festival, Kolakalam, Mamallapuram, Kanniyamman, Pooja, Dark People
× RELATED மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு வரும்...