ஜோலார்பேட்டை அருகே ரயிலில் வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே ரயிலில் வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி ரயில்கள் மூலம் வெளி மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக வேலூர் உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து, தனிப்படை  ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் நேற்று காலை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ரேஷன் அரிசியை பேசஞ்சர்  ரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 26 மூட்டைகளை அடங்கிய ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர், ரேஷன் அரிசியை வேலூர் குடிமை பொருள் வழங்கும் குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு எடுத்துச்சென்றனர். ரயிலில் வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: