×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கொட்டை முந்திரி சீசன் தொடக்கம்-அதிக விலை கிடைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருசநாடு, மேல்வாலிப்பாறை, காந்திகிராமம், முத்தாலம்பாறை, கோம்பைத்தொழு, குமணன்தொழு உள்ளிட்ட பல கிராமங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொட்டை முந்திரி சாகுபடி நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்ததால், கொட்டை முந்திரி மரங்களில் பூ மற்றும் பிஞ்சுகளின் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதனால், விவசாயிகள் மரங்களுக்கு மருந்து தெளித்து பராமரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டு அதிக விலை கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாக வெயில் காலங்களில் கொட்டை முந்திரி மரங்களில் கருகல் நோய் ஏற்படும். இதனால், மரங்களில் இலைகள் காய்ந்து உதிர்ந்து பூ மற்றும் பிஞ்சுகள் ஏற்படாது. இதனால், தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்ததால் கருகல் நோய் ஏற்படவில்லை. மேலும், நிலத்தடி நீர் உயர்ந்து மரங்களில் பூ, பிஞ்சுகளின் விளைச்சல் அதிகமாக உள்ளது. இதேபோல் விலையும் அதிகரித்தால் கொட்டை முந்திரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர் என தெரிவித்தனர்.

Tags : Katamalai ,Mayilai ,Union , Varusanadu: In the Kadamalai-Mayilai Union, Varusanadu, Melvalipparai, Gandhigramam, Muthalamparai, Gombaitholu, Kumanantholu
× RELATED விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5...