×

'ஏய் உன்ன யாரு உள்ளவிட்டது'ஓடு வெளியே: பெண் பக்தரை சாதி பெயரை சொல்லி திட்டியதாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வழக்குப்பதிவு..!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் பக்தர் சாமி கும்பிட சென்ற போது சாதி பெயரை சொல்லி திட்டியதாக அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளான கணேஷ் தீட்சிதர் என்பவர் சில தினங்களுக்கு முன்பு சாமி கும்பிட சென்ற போது சக தீட்சிதர்களால் தடுத்து தாக்கப்பட்டதாக அவர் போலீசார் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சிதம்பரம் நகர போலீசார் 3 தீட்சிதர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் மறுநாள் அவரது மகனான தர்ஷன் தீட்சிதர் என்பவர் சிதம்பரத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் பக்தரை சாமி கும்பிட கனகசபை எனப்படும் சிற்றம்பல மேடை மீது அழைத்து சென்றார். அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி சாதி பெயரை சொல்லி திட்டியதாக அவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது கூட்டமாக சேர்ந்து தடுத்தல், தாக்குதல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று கணேஷ் தீட்சிதர் மற்றும் அவரது மகன் தர்ஷன் தீட்சிதர் ஆகிய இருவரும் கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற போது சக தீட்சிதர்கள் மீண்டும் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை என கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி அனைவரும் சாமி கும்பிட வேண்டும் என்பதே தனது விருப்பம் என தடுக்கப்பட்ட தர்ஷன் தீட்சிதர் கூறியுள்ளார். சோழர்கள் கட்டிய நடராஜர் கோயிலில் கனகசபை மீது யாரும் ஏறக்கூடாது என தீட்சிதர்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Chidambaram ,Natarajar ,Dikshitars , Female devotee, caste, Chidambaram Natarajar Temple Dixit, case
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...