×

போர் பதற்றம் தணிந்ததன் எதிரொலியா ?: ஒரே நாளில் சவரன் ரூ. 248 குறைந்து ரூ.37,320க்கு விற்பனை : நகை பிரியர்கள் நிம்மதி

சென்னை: தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த 2ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.36,192க்கு விற்கப்பட்டது. 3ம் தேதி ரூ.36,256, 4ம் தேதி ரூ.36,296, 5ம் தேதி ரூ.36,336, 7ம் தேதி ரூ.36,360, 8ம் தேதி ரூ.36,464, 9ம் தேதி ரூ.36,672, 10ம் தேதி ரூ.36,808, 11ம் தேதி ரூ.36,880க்கும் விற்க்கப்பட்டது. 12ம் தேதி யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் சவரனுக்கு ரூ.840 அதிகரித்து ஒரு சவரன் ரூ.37,720க்கும் விற்கப்பட்டது. 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும்.

அதனால், முந்தைய நாள் விலையிலேயே விற்பனையானது. நேற்று முன்தினம் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.4,695க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.37,560க்கும் விற்கப்பட்டது. இந்த விலை குறைவு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று காலையில் மட்டும் தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ரூ.43 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,738க்கும், சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ஒரு சவரன் ரூ.37,904க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை சவரன் ரூ.38 ஆயிரத்தை நெருங்கியது. தொடர் விலை ஏற்றத்துக்கு ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றமே காரணம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தங்கம் விலையில் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது, கிராமுக்கு ரூ.31 குறைந்து ஒரு கிராம் ரூ.4,665க்கும், பவுனுக்கு ரூ.248 குறைந்து ஒரு பவுன் ரூ.37,320க்கும் விற்கப்பட்டது.  ரஷ்யா-உக்ரைன் இடையே நிலவிய போர் பதற்றம் தணிந்ததால் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ. 67,80க்கு விற்பனை ஆகி வருகிறது.


Tags : Etholia ,Swaran , சென்னை,தங்கம்,சவரன்,உயர்வு
× RELATED இன்டர்போல் உதவியுடன் யுஏஇயில்...