×

எல்லாம் சம்திங்... சம்திங்... அடக்கி வாசிக்கும் சுயேச்சைகள்

வெயிலூர் மாநகரத்துல 60 வார்டுகள் இருக்குது. இதுல 2 வார்டுகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால, இப்ப 58 வார்டுகளுக்கு தான் தேர்தல் நடக்குது. இதுக்காக மொத்தம் 354பேர் போட்டி போடுறாங்க. பெரிய கட்சிகள் தான், மேள, தாளம் முழங்க தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வர்றாங்க. ஆனால், சுயேச்சைகளை எந்த திசையில் பார்த்தாலும் களத்துல கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் யாரையும் காணலையாம். இவங்க போட்டியில கலந்துக்குறாங்களா, இல்லையான்னே தெரியலையேன்னு, ஜனங்க கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. விஷயம் தெரிஞ்சவங்க, இந்த உதிரி கட்சிகள் எல்லாம், சம்திங் வாங்கிகிட்டு, அமைதியாகிட்டதாக பேசிக்கிறாங்க. உதிரி கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளருங்க, டீல் பேசுறதாக வேற புகார்கள் எழுந்திருக்குது. இதனாலத்தான் இந்த கட்சிங்க களத்துல காணாமல் போயிருக்குதாம்.

Tags : Samthing ,Samting ,Sealer , Everything is Something ... Something ... Suppressively Independents
× RELATED கக்கன் திரைப்படத்திற்கு வரி விலக்கு:...