என்னை கெஞ்ச வச்சிட்டீங்களே: வாக்காளர்களிடம் கமல்ஹாசன் புலம்பல்

திருப்பரங்குன்றம்: மார்தட்டி கர்வமாக பேச வேண்டிய என்னை உங்களிடம் வாக்குக்காக கெஞ்ச வைத்து விட்டீர்கள் என பிரசாரத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேசினார். மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நேற்று மதுரை வந்த அக்கட்சி தலைவர் கமல்ஹாசன், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மக்கள் நீதி மய்யத்தின் வரவேற்புக்கு அரசியலில் வயது, முன் அனுபவம் இன்மை உள்ளிட்டவை இடையூறாக இருந்தது. அந்த அனுபவங்கள் தற்பொழுது அதிகரித்து மக்களின் ஆதரவும் முன்பை விட அதிகரித்துள்ளது. மாற்றத்திற்காக நாங்கள் முன் வருவது போல் மக்களும் ஒரு அடி முன்வைக்க வேண்டும்’’ என்றார். திருப்பரங்குன்றம் பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன், ‘‘மக்களாகிய நீங்கள் என்னை பணம், புகழ் கொடுத்து நன்றாக வைத்துள்ளீர்கள். எனவே மார்தட்டி கர்வமாக பேச வேண்டிய என்னை உங்களிடம் வாக்குக்காக கெஞ்ச வைத்து விட்டீர்கள். உங்கள் மனசாட்சிகள் தூங்குகிறது. மனசாட்சியை தட்டி எழுப்புங்கள்’’ என்றார்.

Related Stories: