×

ஒன்றரை மாதத்தில் ஓய்ந்தது ஒமிக்ரான்

புதுடெல்லி: ஒன்றரை மாதத்திற்குப் பிறகு தினசரி கொனோரா தொற்று 30 ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட மிக வேகமாக பரவக்கூடிய வீரியமிக்க ஒமிக்ரான் வகை வைரசால் இந்தியாவில் கொரோனா 3வது அலை ஏற்பட்டது. தினசரி தொற்று 10 ஆயிரத்துக்கு கீழ் வெகுவாக குறைந்திருந்த நிலையில், கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் தினசரி தொற்று மீண்டும் 1 லட்சத்தை தாண்டியது. ஆனால் முந்தைய 2 அலைகளைப் போல் இல்லாமல், 3வது அலை மிக வேகமாக இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

நாட்டில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதால், ஒமிக்ரானால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. இதனால் சுமார் ஒன்றரை மாதத்தில் மீண்டும் பழைய நிலை திரும்பி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 27,409 பேர் புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. 44 நாட்களுக்குப் பிறகு தினசரி தொற்று 30 ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது. மொத்த தொற்று பாதிப்பு 4.26 கோடி. கடந்த 24 மணி நேரத்தில் 347 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 9 ஆயிரத்து 358 ஆக உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 23 ஆயிரத்து 127 ஆக குறைந்துள்ளது.


Tags : Omigron , Omigron rested for a month and a half
× RELATED வெளிநாட்டிலிருந்து ஈரோடு வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் இல்லை