×

வடக்கு கொரட்டூர் பகுதியில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை: திமுக வேட்பாளர் உஷா நாகராஜ் உறுதி

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலம் 83வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உஷா நாகராஜ், நேற்று வடக்கு கொரட்டூர் பகுதிகளான எல்லையம்மன் நகர், லேக் வியூ கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, வேட்பாளர் உஷா நாகராஜ் பொதுமக்களிடம் பேசுகையில், ‘‘அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ ஆகியோரின் ஒத்துழைப்புடன் வடக்கு கொரட்டூர் பகுதியில் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன். அடிப்படை ேதவைகளை நிறைவேற்றுவேன். எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’’ என்றார். அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், வட்ட செயலாளர்கள் சீ.லோகநாதன், மு.விஜயகுமார், பகுதி நிர்வாகிகள் பொற்செழியன், ராஜ்குமார், பாபு இளஞ்செழியன், லெட்சுமி, மோகன்குமார், முருகன், பிரகாசம், கோவிந்தன், தவமணி, கிருஷ்ணன், எம்.டில்லிபாபு, முத்து, செல்வம், அமிர்தலிங்கம் சிவராமன், கு.டில்லிபாபு ஸ்ரீநாத், ஜெயபால், கண்ணன், திருநாவுக்கரசு, உஷா, தரணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : North Korattur ,DMK ,Usha Nagaraj , Action to eradicate mosquitoes in North Korattur: DMK candidate Usha Nagaraj confirmed
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி