திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டனை ஆதரித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரசாரம்

ஆலந்தூர்: பெருங்குடி மண்டலம் 186வது வார்டு திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டனை ஆதரித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புழுதிவாக்கம் மெயின் ரோடு, பாலாஜி நகர், பஜனை கோயில் தெரு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ, பகுதி செயலாளர் எஸ்.வி.ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘‘திமுக வேட்பாளர் மணிகண்டனை வெற்றி பெற செய்தால், புழுதிவாக்கம் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.

உயர் அழுத்த மின் வயர்களை மாற்றி பூமிக்கடியில் பதித்து தரப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட விதவை, முதியோர் உதவித் தொகைகளை மணிகண்டன் பெற்றுத் தருவார். நீங்கள் மணிகண்டனை வெற்றிபெற செய்தால் மட்டுமே இந்த பகுதிக்கு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறும். அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது, முன்னாள் கவுன்சிலர் பர்மன் குமாரசாமி, குபேரா யோகராஜன், வழக்கறிஞர் பா.கமலநாதன், ராமமூர்த்தி, சுப.சரவணன், ஜனார்த்தனன், லட்சுமணன், கார்த்திக், மதுசூதனன், ரகுபதி, மணிகண்டன், அஜித், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ஆர்.பகத்சிங், லோகநாதன், குமார், பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: