அலியா பட்டின் ஆபாச வசனம் பேசும் சிறுமி: நடவடிக்கை கேட்கிறார் கங்கனா

மும்பை: சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அலியா பட் நடித்துள்ள இந்தி படம் கங்குபாய் கத்தியவாடி. பெண்களை வைத்து மும்பையில் பாலியல் தொழில் செய்து வந்த கங்குபாய் என்ற பெண்ணை பற்றிய கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில், பாலியல் தொழில் பற்றிய வசனம் ஒன்றை பீடி குடித்தபடி அலியா பட் பேசுவார். அலியா பட் போலவே வேடமணிந்து, வாயில் பீடி வைத்தபடி இதே வசனத்தை ஒரு சிறுமி பேசுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இது குறித்து கங்கனா ரனவத் கூறும்போது, ‘நாடு எங்கு போய்க்கொண்டிருக்கிறது. ஒரு ஆபாச பொருள் தரும் வசனத்தை சின்ன குழந்தையை பேச வைத்துள்ளனர்.

இதை பார்க்கும் மற்ற குழந்தைகளின் மனநிலை எப்படி மாறும்? இதுபோன்ற செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்தும் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

Related Stories: