ரெஜினாவின் வெப்சீரிஸ் மீது வழக்கு தொடர முடிவு

சென்னை: 1947க்கு பிறகு விண்வெளி ஆராய்ச்சிகள் நடந்தது. இதில் விஞ்ஞானிகள் எந்த வகையான பிரச்னைகளை சந்தித்தனர் என்பதை மையமாக கொண்டு ராக்கெட் பாய்ஸ் என்ற இந்தி வெப்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் பட ஹீரோயின் ரெஜினா நடித்துள்ளார். அப்துல் கலாம் வேடத்தில் அர்ஜுன் ராதாகிருஷ்ணன் நடித்துள்ளார். அபய் பன்னு இயக்கியுள்ளார். வித்யா பாலனின் கணவர் சித்தார்த் ராய் கபூர் தயாரித்துள்ளார். இந்த வெப்தொடரில் திருவிதாங்கூரின் கடைசி மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா குறித்து தவறாக சித்தரித்திருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது. திருவிதாங்கூரில் இருந்து மோனோசைட் தாதுக்களை ஏற்றுமதி செய்ததில் ஊழல் நடந்ததாகவும் இதற்கு மன்னர் உடந்தையாக இருந்ததாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து மன்னர் சித்திரை திருநாளின் மருமகள் அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமிபாய் கூறும்போது, ‘ராக்கெட் பாய்ஸ் வெப் தொடரில் திருவிதாங்கூரின் கடைசி மன்னர் சித்திரை திருநாளை உண்மைக்கு மாறாக தவறாக சித்தரித்து உள்ளனர். எனவே இந்த தொடருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: