பயணி தவறவிட்ட கைச்செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த காவலரை நேரில் அழைத்து பாராட்டினார் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பயணி தவறவிட்ட கைச்செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரிமையாளரிடம் ஒப்படைக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த காவலர் ஆகிய இருவரை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

ஆட்டோவில் பயணி தவறவிட்ட 3 1/2 சவரன் தங்க கைச்செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவிய நேர்மையான ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு தெரிவித்தார். சென்னை, வியாசர்பாடி, பெரியார் நகர், நாகை அம்மையார் தெரு, எண்.10/9 என்ற முகவரியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமார், வ/42, த/பெ. சீனிவாசன் என்பவர் கடந்த 11.02.2022 அன்று காலை சுமார் 9.30 மணியளவில் மாதவரம் மூலக்கடை பகுதியில் வெங்கடேசபிள்ளை, வ/70, த/பெ.சாமிநாதபிள்ளை, திருவல்லிக்கேணி மற்றும் அவரது குடும்பத்தினரைச் சேர்ந்த 2  நபர்களை  ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு திருவல்லிக்கேணி தபால் அலுவலகம் அருகே இறக்கிவிட்டுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமார் சிறிது நேரம் கழித்து ஆட்டோவின் பின்னால் பார்த்த போது, தங்க கைச்செயின் ஆட்டோவின் சீட்டிற்கு கீழே கிடந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமார் மேற்படி கைச்செயினை எடுத்து  D-1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரிடம் ஒப்படைக்க கோரினார். D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து தங்க கைச்செயினை ஆட்டோவில் தவறவிட்ட வெங்கடேசபிள்ளை என்பவரை காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்து விசாரணை செய்தனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமார்  தனது ஆட்டோவில் பயணித்த பயணி இவர் தான் என உறுதி செய்தார். மேலும்,  வெங்கடேசபிள்ளை  கூறிய  கைச்செயினின்  அடையாளங்களை வைத்து போலீசார் தங்க  கைச்செயின் வெங்கடேசபிள்ளைக்கு சொந்தமானது என உறுதி செய்த பிறகு  3 1/2  சவரன் கைச்செயினை பத்திரமாக உரியவரிடம் ஒப்படைத்தனர்.

சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் நடந்து சென்ற நபரிடம் செல்போன் பறித்து தப்ப முயன்ற குற்றவாளிகளில் ஒருவரை மடக்கி பிடித்த முதல் நிலை காவலருக்கு பாராட்டு தெரிவித்தார். சென்னை, பல்லவன் சாலை, எஸ்.எம் நகர்,  சி-பிளாக், எண்.271 என்ற முகவரியில் வசிக்கும்  பசுமலை, வ/55, த/பெ.நடேசன் என்பவர் கடந்த 12.02.2022 அன்று மதியம்  1.45 மணியளவில் அண்ணாசாலை, தி இந்து அலுவலகம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மேற்படி பசுமலையிடம் முகவரி கேட்பது போல நடித்து அவரது செல்போனை  பிடுங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளனர். அவ்வழியாக பணிமுடித்து இருசக்கரவாகனத்தில்  வந்த முதல் நிலைக்காவலர் திரு.D.சந்திரசேகர், (மு.நி.கா.31356) என்பவர் சிறிதும் தாமதிக்காமல் மேற்படி செல்போன் பறிப்பு குற்றவாளிகளை தனது இருசக்கர வாகனத்தில் துரத்திச்சென்று, சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்கெட் அருகில் ஒருவரை மடக்கிப்பிடித்து F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட நபர்  ஜான்பாபு, வ/20, த/பெ.முனுசாமி, எண்.1/78, பஜனை கோயில் தெரு, சைதாப்பேட்டை ரோடு, வடபழனி என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணை செய்து தப்பியோடிய குற்றவாளி சதிஷ்குமார் வ/21, த/பெ.சத்தியமூர்த்தி, எண்.36, 13வது தெரு, அசோக்நகர், வடபழனி, சென்னை என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து  1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.   பயணி ஆட்டோவில் தவறவிட்ட 3 1/2 சவரன் எடையுள்ள கைச்செயினை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரிமையாளரிடம் ஒப்படைக்க உதவிய ஆட்டோ ஓட்டுநர்  நந்தகுமார் மற்றும் செல்போன் பறிப்பு குற்றவாளியை மடக்கிப்பிடித்த F-4 ஆயிரம் விளக்கு காவல் நிலைய முதல் நிலைக்காவலர்  சந்திரசேகர் (மு.நி.கா.31356) ஆகிய இருவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சங்கர் ஜிவால்  இன்று (15.02.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Related Stories: